--- --:--:-- --

+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு : அதிக மாணவர்கள் தேர்ச்சியில் திருப்பூர் மாவட்டம் “டாப்”

4

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

மாநில அளவில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92.3% என்ற நிலையில் 97.12% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது.ஈரோடு மற்றும் கோவை 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்த நிலையில் பிளஸ் டூ தேர்வில் கொங்கு மண்டலம் சாதனை படைத்துள்ளது.

 

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் டூ பொதுத் தேர்வை 8.16 லட்சம் மாணவர்கள் எழுதினர். கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பிளஸ் டூ கடைசித் தேர்வை சுமார் 40 ஆயிரம் மாணவர் எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. இவர்களுக்கு மறுதேர்வு நடத்துவது தொடர்ந்து தள்ளிப் போன காரணத்தினாலும், விடைத்தாள் திருத்தம் உள்ளிட்ட பணிகளில் சிரமம் ஏற்பட்டதாலும், வழக்கமாக மே மாதத்தில் வெளியாக வேண்டிய பிளஸ் டூ தேர்வு முடிவுகள் தாமதமாகின.

இந்நிலையில் இன்று காலை திடீரென தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தரப்பில் அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து காலை 9 மணிக்கு பிளஸ் டூ முடிவுகள் இணையதளத்தில் வெளியானது.

 

மேலும் மாணவர்களின் செல்போன் எண்களில் குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பப்பட்டது. எதிர்பாராமல் வெளியான இந்த பிளஸ் டூ தேர்வு ரிசல்ட்டால் மாணவர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.

 

இன்று வெளியான பிளஸ் டூ முடிவுகளின் படி மாநில அளவில் தேர்ச்சி விகிதம் 92.3% ஆகும். இதில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 5.39% அதிகமாகும். மாணவிகள் 94.80 % மும் , மாணவர்கள் 89.41 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

இந்த தேர்வில் கொங்கு மண்டல பள்ளிகளின் மாணவர்கள், மாநிலத்திலேயே அதிக சதவீத அளவில் தேர்ச்சி பெற்று டாப் 3 இடங்களை திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்கள் கைப்பற்றியுள்ள சாதனையும் குறிப்பிடத்தக்கது.

 

“இதில் 97.12% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் டாப் இடத்தை பிடித்துள்ளது. 96.99 சதவீத தேர்ச்சியும் ஈரோடு 2-வது இடத்தையும், 96.39% தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் 3-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளன”

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon