--- --:--:-- --

தனக்கும், தங்கக் கடத்தலுக்கும் சம்பந்தமில்லை எனக்கூறும் ஸ்வப்னா..!

4

கேரளாவில் தங்க கடத்தலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சுவப்னா, தனக்கும் தங்க கடத்தலுக்கும் தொடர்பில்லை என்று கூறி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். டிப்ளமாட்டிக் பார்சல் என்ற பெயரில் விமானம் மூலமாக வந்த 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கேரளாவில் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

 

முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐடி துறையில் பணியாற்றும் ஸ்வப்னாவிற்கு இதில் தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணை கோரியும் முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தங்க கடத்தலில் முக்கிய நபராக சந்தேகிக்கப்படும் ஸ்வப்னா கடந்த ஐந்தாம் தேதி முதல் தலைமறைவாக இருக்கும் நிலையில் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் தற்போது மனுதாக்கல் செய்துள்ளார்.

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரக தலைவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே திருவனந்தபுரம் வந்த டிப்ளமாட்டிக் பார் சலே வழங்க கேட்டுக் கொண்டதாகவும் அதில் தங்கம் இருப்பது தனக்கு தெரியாது என்றும் ஸ்வப்னா கூறியிருக்கிறார். ஸ்வப்னாவுக்கு உதவியதாக கூறப்படும் ஸ்வப்னா நாயரும் தலைமறைவாகவே உள்ளார். இருவரையும் பிடிக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon