--- --:--:-- --

தந்தை, மகன் கொலை – காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பி செல்ல பயன்படுத்திய கார் உரிமையாளரிடம் ஒப்படைப்பு..!

5

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பி செல்ல பயன்படுத்திய கார் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் கைது செய்யப்படுவதற்கு முன் காரில் தப்பி செல்ல முயன்ற அந்த வீடியோ காட்சிகள் வெளியான போது காரின் பதிவு எண்ணை கொண்டு விசாரணைகளை நடைபெற்றதில் அப்போது அந்த கார் சென்னையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமானது என்பதும் கடந்த 2011 ஆம் ஆண்டு காரை வாடகைக்கு கொடுத்தது தெரியவந்தது.

 

இதையடுத்து சுரேஷ்குமார், தூத்துக்குடியில் உள்ள அவர்களை அணுகியதை அடுத்து அது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் வாகன ஆவணங்களை ஆய்வு செய்து காரை உரிமையாளர் சுரேஷ்குமாரிடம் ஒப்படைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon