--- --:--:-- --

காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய காவலர் மீது இளம்பெண் புகார்..!

13

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே காதலித்து வந்த தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் காவலர் ஒருவர் ஏமாற்றிவிட்டதாக இளம்பெண் புகார் அளித்துள்ளார். ராஜபாளையம் அடுத்த மேல ராஜகுல ராமன் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் காவலராக உள்ளார்.

 

இவருக்கும் நடுசுரங்குடியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி காலம் தாழ்த்தி வந்த விக்னேஷ் அண்மையில் வேறு ஒரு பெண்ணை மணம் முடித்துள்ளார். இதனால் தன்னை ஏமாற்றிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இளம் பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon