--- --:--:-- --

என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு என அறிவிப்பு..!

10

நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணிபுரிந்த ஊழியர்களில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர்.

 

என்எல்சியில் பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் நிதியுதவி இழப்பீடு வழங்கப்படும் என்று என்எல்சி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாய்லர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் என்எல்சி நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது.

 

என்எல்சிவிபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கேட்டு வந்த நிலையில் தற்போது என்எல்சி நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon