தமிழ்நாடு உள்ளிட்ட பல இடங்களில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு..!
நாடு முழுவதும் வேலை வாய்ப்பின்மை 6 வாரங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் தனியார் நிறுவனமான சிஎம்ஐஇ தெரிவித்துள்ளது. இந்தியாவில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூன் 28ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 10.69 சதவீதமாக இருந்தது.
இதுவே ஜூன் 21ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11.29 சதவீதமாக இருந்ததாக சிஎம்ஐஇ தெரிவித்துள்ளது. அதேநேரம் கிராமப்புற வேலை வாய்ப்பின்மை 6 வாரங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்து இருப்பதாக அந்த நிறுவனம் கணித்துள்ளது.
கிராமப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.26 சதவீதத்திலிருந்து 7.62 சதவீதமாக அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பொது முடக்கம் நீட்டிப்பு காரணமாக தொழிற்சாலைகள் முழுமையாக இயங்காததே வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.






