டிக்டாக் வீடியோவால் அக்கா கணவன் கொலை..!
தூத்துக்குடி அருகே டிக் டோக் வீடியோவால் மனைவி பிரிந்து சென்றது தொடர்பான வாக்குவாதத்தில் அக்கா கணவரை கட்டையால் அடித்துக் கொன்றதாக மைத்துனரை போலீசார் தேடி வருகின்றனர்.
தங்கம்மாள் புரத்தை சேர்ந்த சுப்பையா, தமிழ்ச்செல்வி தம்பதியின் 15 வயது மகன் வீடியோ ஒன்றை பதிவிட்டு அதே பகுதியில் வசிக்கும் தாய்மாமன் செல்வக்குமாரின் மனைவி கவிதாவுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்தப் பாடலுக்கு கவிதா டிக் டாக் வீடியோ பதிவு செய்வதை பார்த்து செல்வகுமார் கண்டிப்பதாகவும் இதனால் ஏற்பட்ட தகராறில் தாய் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனைவி தமிழ்ச்செல்வியுட ன் கடன்தொடர்பாக ஏற்பட்ட தகராறு குறித்து செல்வகுமாரிடம் சுப்பையா சொல்ல சென்றதாகவும் அப்போது சுப்பையா குடும்பத்தார் தனது மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வகுமார் ஆத்திரத்தில் கட்டையால் அடித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடி வருகின்றனர்.






