இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை..!
இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறலை தடுத்த இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து சீனாவிற்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வந்தாலும், சீன பொருட்களுடன் இந்தியாவிற்கு கப்பலில் வரும் கண்டெய்னர்களை விடுவிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சீன பொருட்களையும், அதனை தொடர்ந்து சீனாவில் டிக் டாக், ஹலோ, ஷேரிட் உள்ளிட்ட செயலிகளையும் இந்திய மக்களும் புறக்கணிக்க தொடங்கினார். இந்த நிலையில் சமூக கலாச்சார சீரழிவுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான மக்களின் தனிப்பட்ட விவரங்களை திருடிய குற்றச்சாட்டுக்குள்ளான டிக் டாக், ஷேர்இட், ஹலோ, லைக், யூ சி பிரௌசர், செல்பி வி சிட்டி, வீ மீட், வைரஸ் கிளீனர், கிளீன் மாஸ்டர், வீ மேட் 59 செயலிகளை மத்திய அரசு அதிரடியாக தடை செய்தது.
குறிப்பாக டிக் டாக்கிற்கு விதிக்கப்பட்ட இந்த தடை நாடு முழுவதும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி பொழுதை கழித்து வந்த பலர் சோகம் அடைந்துள்ளனர். இத்தகைய செயலிகளை தவிர்க்க இயலாமல் பயன்படுத்துவதாக இருந்தால் சீன செயலிகளுக்கு இணையாக இந்திய மற்றும் வேறு நாடுகளின் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளன .

அவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி சீனாவின் டிக் டாக், பிகோ, லைக், ஹலோ போன்றவற்றிக்கு பதிலாக இந்தியாவின் ரோபோஸோ, என்ஜாய், டப்ஸ்மாஷ், சிங்காரி போன்ற செயலிகள் உள்ளன. ஷேர்இட் செய்வதற்கு பதிலாக ஜியோ ஷேர், ஷேர் பைல்ஸ் என்ற செயலிகள் உள்ளன. விவோ வீடியோ எடிட்டர் செயலிக்கு பதிலாக பவர்டைரக்டர் விடியோ எடிட்டர், குயிக் பிரீ விடியோ எடிட்டர் போன்றவை பயன்பாட்டில் உள்ளன .
யூசி ப்ரவுசர் க்கு பதிலாக எபிக் பிரவுசர், ஜியோ பிரவுசர் போன்றவையும் கேம் ஸ்கேனருக்கு பதில் டாக் ஸ்கேனர், அடோப் ஸ்கேன் போன்றவை பயன்பாட்டில் உள்ளன. ப்யூடி பிளஸ், யூ கேம் மேக்கப் செயலிக்கு பதிலாக பி6 டுவல், பிக்ஸ் ஆர்ட் போன்ற செயலிகள் உள்ளது. தடைசெய்யப்பட்டுள்ள சீனாவின் 59 செயலிகளுக்கு மாற்றாக வேறு செயலிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






