கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கணவனை கொன்ற மனைவி..!
தமிழகத்தில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் 500 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கைதாகி ஜாமீனில் விடுதலையான ஜான் பிரபாகரனை ஹைதராபாத்தில் வைத்து கொலை செய்ததாக அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த ஜான் பிரபாகரன், சுகன்யா தம்பதியினர் கடந்த 2012ஆம் ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் பொதுமக்களிடையே 500 கோடி ரூபாய் அளவிற்கு பணம் வசூல் செய்து மோசடி செய்ததாக கைதாகினார். சில மாதங்களில் ஜான் பிரபாகரன் மட்டும் ஜாமினில் வெளியே வந்து ஹைதராபாத் தப்பி ஓடினார்.
ஹைதராபாத்தில் உள்ள மௌலாளியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த ஜான் பிரபாகரன் கடந்த 23 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். விசாரணையில் 2018 ஆம் ஆண்டு விடுதலையான அவரது மனைவி சுகன்யாவே பிரபாகரனை கொன்றது தெரியவந்தது.
ஜாமீனில் விடுதலையான பிரபாகரன் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை அறிந்து ஆத்திரத்தில் சுகன்யா அவரது முகத்தில் தலையணையை அழுத்தி கொன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.






