--- --:--:-- --

மதுரையில் தனிமைப்பட்டவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி!

10

மதுரையில் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 63 வயது முதியவர் ஒருவர் ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கொரொனாவால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலால் தவித்து வந்த பழங்கா நத்தைச் சேர்ந்த இவர் உரிய சிகிச்சையும் உணவும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார்.

 

படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது முதியவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon