--- --:--:-- --

கொரொனா தொற்றுக்கு 13 வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்!

9.1

தஞ்சையில் கொரொனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுவன் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மருத்துவ கல்லூரி ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த 13 வயது சிறுவன் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அந்த சிறுவனுக்கு கொரொனா உறுதி செய்யப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை மூச்சுத் திணறல் அதிகமாகியுள்ளது. மருத்துவர்கள் அளித்த தொடர் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பூக்குளம் கிராமத்தை சேர்ந்த 57 வயது முதியவர் ஒருவர் கொரொனா தொற்றால் சிகிச்சை பலனளிக்காமல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

 

இதேபோல புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரொனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 62 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அந்த மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon