ஜானகி உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தி..!
பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ் ஜானகி தாம் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக விளக்கமளித்துள்ளார். 82 வயதான ஜானகியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியிருந்தது. இந்த சூழலில் திரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜானகியுடன் பேசினார்.
அப்போது வீட்டில்தான் ஓய்வில் இருப்பதாக எஸ் ஜானகி தெரிவித்தார். எஸ் ஜானகி மகன் முரளி கிருஷ்ணா மற்றும் இசையமைப்பாளர் தீனாவும் இந்த வதந்தி குறித்து விளக்கமளித்தனர். எஸ்.ஜானகி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் எனவே ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர்.






