செல்போன்களில் கொரோனாவை கண்டறியும் புதிய வசதி
பயனாளர்களின் நடமாட்டத்தை கண்காணித்து கொரொனா நோயாளிக்கு அருகில் செல்ல நேர்ந்தால் அவர்களை எச்சரிக்ககூடிய புதிய வசதியை கூகுள் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐபோன் நிறுவனங்கள் வடிவமைத்துள்ளன.
கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசு ஆரோக்யா சேது எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியின் மூலம் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் அருகாமையில் யாரேனும் இருந்தால் அதனை பயனாளர்கள் உடனடியாக அறியலாம்.
இந்த நிலையில் இந்த வசதியை எந்தவித தனிப்பட்ட செயலியும் இன்றி போன்களிலேயே ஏற்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவர கூகுள் மற்றும் ஐபோன் நிறுவனங்கள் மத்திய அரசை நாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மத்திய அரசு இந்த திட்டம் தொடர்பாக இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.






