--- --:--:-- --

தந்தையின் இறுதி சடங்கிற்கு வந்த ராணுவ வீரருக்கு அனுமதி மறுப்பு..!

3

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய விடுமுறையில் வந்த ராணுவ அதிகாரி தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பப்பட்டார். இருக்கன்குடி மேட்டுபட்டியை சேர்ந்த சங்கர் என்ற ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

 

அவரது தந்தை நேற்று காலமான நிலையில் இறுதி சடங்கு செய்ய அவசர கால விடுமுறையில் விமானம் மூலம் திருச்சி வந்தார். இவருக்கு ராணுவ முகாமிலும், ஊர் திருச்சி விமான நிலையத்திலும் பரிசோதனைகள் நடத்தப் பட்டது. தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து திருச்சியில் இருந்து கார் மூலம் விருதுநகர் சென்று அவரை தடுத்த சுகாதாரத்துறையினர் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon