--- --:--:-- --

கொரொனாவால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ஆக்ஸிஜனை நிறுத்திய மருத்துவமனை…கடைசி நிமிட வீடியோ..!

4

மருத்துவமனை நிர்வாகம் ஆக்சிஜன் வழங்குவதை நிறுத்தி விட்டதால் தாம் உயிர் இறந்து கொண்டிருப்பதாக 34 வயது நோயாளி வெளியிட்ட கடைசி வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

பத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஹைதராபாத் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் சேர்ந்த இந்த இளைஞர் தனது தந்தைக்கு அனுப்பிய வீடியோவில் இந்த பரிதாப தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

 

தமக்கு வழங்கப்பட்ட ஆக்சிஜனை கடந்த மூன்று மணி நேரமாக நிறுத்தி விட்டதால் மூச்சுவிடாமல் திணறுவதாக கூறும் அந்த இளைஞர் அதன் பின்னர் ஒரு மணி நேரத்தில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இறுதி சடங்குகள் நடந்த மறுதினம் முன்னதாக அவரது சுவாப் சோதனையை நடத்திய தனியார் மருத்துவமனை கொரொனா தொற்றை உறுதி செய்துள்ளது.

 

இது தெரியாமல் இளைஞர் உடலை கையாண்ட தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேர் தங்களுக்கும் தொற்று பரவி இருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon