--- --:--:-- --

மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கொரொனா தொற்று குறைவாகவே உள்ளது..!

3

கொரோனா பாதிப்பில் பிற நாடுகளைவிட இந்தியா நல்ல நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கேரளாவில் பலங்கரம் மார் தோமாசிரியன் தேவாலயத்தில் நடைபெற்ற பாதிரியார் ஜோசபின் 90வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் காணொளி மூலமாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பாஜக அரசின் திட்டங்களால் சுமார் 8 கோடி குடும்பங்கள் புகையில்லா சமையலறையை பெற்றுள்ளன என்றார்.

 

மேலும் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இதுவரை ஒன்றரை கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். கொரொனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் தீவிரமாக இருக்கும் கணிக்கப்பட்டிருந்த நிலையில் பொது முடக்கம் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்போடு மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் பல நாடுகளை காட்டிலும் இந்தியா சிறப்பான இடத்திலேயே இருக்கிறது என்றார்.

 

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் விகிதம் உயர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon