கீழடி 6ம் கட்ட அகழாய்வு குழியில் நெருப்பு பயன்படுத்திய அமைப்பு கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வில் நெருப்பு பயன்படுத்திய அமைப்பு கண்டுபிடிக்கபட்டுள்ளது. கீழடி 6ம் கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி 19ல் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகின்றன. ஏற்கனவே பானைகள், செங்கல் கட்டடப் பகுதி, விலங்கின் எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கபட்ட நிலையில், உலை உள்ள குழி அருகே நேற்று நெருப்பு பயன்படுத்திய அமைப்பு கண்டுபிடிக்கபட்டது.
13அடி நீளத்தில் 10அடி ஆழமான குழியில் நெருப்பு பயன்படுத்திய அமைப்பு கண்டுபிடிக்கபட்டுள்ளது. அதே குழி அருகே கறுப்புக் கலரில் சாம்பல் துகள்கள் அமைப்பு உள்ளது. ஏற்கனவே கீழடியில் நடைபெற்ற பல ஆய்வுகளில் அது தொழிற் நகரமாக இருந்ததற்கான சான்றாக பல அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது நெருப்பு பயன்படுத்திய அமைப்பு மூலம் இரும்பு, கண்ணாடி, எஃக்கு போன்றவற்றைத் தயாரிக்க இது பயன்பட்டிருக்காலம் என தெரியவருகிறது.

தொடர்ந்து கீழடி பகுதிகளில் தொழிற் சம்பந்தமாக பொருட்கள் மற்றும் அமைப்புகள் தெரிய வருவதால் 2,600 ஆண்டுக்கு முன்னால் பண்டை தமிழர்கள் தொழிற்சாலை சார்ந்து இயங்கிவந்துள்ளதாக ஆய்வுகளில் தொடர்ந்து நிரூபணம் ஆகி வருகின்றன.






