--- --:--:-- --

மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் எப்படி ஊதியம் வழங்க முடியும்?

3

கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி வழங்க முடியும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு அரசாணை சட்டவிரோதமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் இயங்காவிட்டாலும் அங்கு பணியாற்றும் அனைவருக்கும் தனியார் பள்ளிகள் சம்பளம் வழங்கி வருவதாகவும் தற்போது கல்விக் கட்டணம் வசூலிக்க அனுமதித்தால் தான் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், வழக்கு முடியும் வரை அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு நீதிபதி ஆர். மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்களுக்கும் மற்றும் பிற ஊழிர்களுக்கும் ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கின்ற நிலையில் அரசு உதவி பெறாத பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்காமல் எப்படி சம்பளத்தை வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

 

ஆன்லைன் வகுப்புகளை பெரும்பாலான பள்ளிகள் தொடங்கி விட்டு வகுப்புகளை நடத்த ஆசிரியர்களை நிர்ப்பந்திக்கும் நிலையில் எப்படி சம்பளம் வழங்காமல் இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். வழக்கு குறித்து தமிழக அரசு ஜூன் 30-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon