--- --:--:-- --

கொரொனா தொற்று உறுதியான நபர் பேருந்தில் பயணித்ததால் பயணிகள் ஓட்டம்!

2

கடலூர் மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு கொரொனா உறுதியானதால் சக பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பண்ருட்டியில் இருந்து வடலூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

 

பேருந்து கொஞ்சிகுப்பம் என்ற இடத்தின் அருகே சென்றபோது 54 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. அவர் பேருந்தில் பயணம் செய்வதாக தெரிந்துகொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது கைபேசியை நடத்துனரிடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.

 

அப்போது நடத்துனருடன் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபருக்கு கொரொனா தொற்று உறுதியாகி இருப்பதால் அவரை அந்த இடத்தில் இறக்கி விடுமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பேருந்து நடத்துனர் இறங்க சொன்னபோது தகவலைக் கேள்விப்பட்டு அனைத்து பயணிகளும் அலறியடித்துக்கொண்டு பேருந்தை விட்டு இறங்கி ஓடினார்கள்.

 

பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பேருந்து நின்று கொண்டிருந்த இடத்திற்கு சென்று கொரொனா உறுதியான அவரையும் அவரது மனைவியையும் தொற்று சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அந்த அரசு பேருந்து பணிமனைக்கு எடுத்து செல்லப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon