--- --:--:-- --

இந்தியாவில் விற்பனைக்கு வரும் ரெம்டெசிவர்!

13

இந்தியாவில் கொரொனா சிகிச்சைக்கான மருந்தை தயாரிப்பதற்கு இரு நிறுவனங்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாடு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஊசியாக செலுத்தப்படும் மருந்துக்கு 6,000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரொனா நோயாளிகளுக்குச் ரெம்டெசிவர் மருந்தை அளிப்பதற்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

 

இதையடுத்து ரெம்டெசிவர் மருந்தை தயாரிப்பதற்காக அமெரிக்காவை சேர்ந்த கிளியட்ஸ் சயின்ஸ் என்ற நிறுவனத்துடன் இந்தியாவை சேர்ந்த ஹெட்ரா நிறுவனமும், சிப்ளா நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த நிலையில் இரு இந்திய நிறுவனங்களும் ரெம்டெசிவர் மருந்துகளைத் தயாரிப்பதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது .

 

இது தொடர்பாக ஹெட்டரா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ரெம்டெசிவர் மருந்து இந்தியாவில் கோவிபோர் என்ற பெயரில் வெளியிடப்படும் என்றும், ஊசி வழியாக செலுத்தும் 100 மில்லிகிராம் 5 ஆயிரம் ரூபாய் முதல், 6,000 ரூபாய் வரையில் விற்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

 

கோபி போர் மருந்து மருத்துவமனை மற்றும் அரசு மூலமே விற்பனை செய்யப்படும் என்றும் சில்லரை மருந்து கடைகளில் கிடைக்காது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல் சிப்லா நிறுவனம் தயாரித்துள்ள சிப்ரமி மருந்தும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் ஹெட்டரா போல் அல்லாமல் வெளிச் சந்தைகளிலும் சிப்ரமி மருந்து கிடைக்கும் என்று சிப்ளா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இதனிடையே லேசான அறிகுறி உள்ள கொரொனா நோயாளிகளுக்கு வழங்குவதற்காக ஃபெபிபிரவீர் என்ற பெயரில் மாத்திரையை கிளன்மார்க் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஒரு மாத்திரையின் விலை 103 ரூபாய் ஆகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon