--- --:--:-- --

ஆயுதங்கள் மூலம் சீனாவிற்கு பதிலடி கொட்க்க இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் உள்ளது!

6

லடாக் எல்லையில் அத்துமீறும் சீனாவிற்கு ஆயுதங்கள் மூலம் பதிலடி தருவதற்கு இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்து உள்ளனர்.

 

இந்த நிலையில் லடாக் எல்லை நிலவரம் குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இதில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவம் விமானப்படை கடற்படை தளபதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் லடாக் எல்லையில் அத்துமீறும் சீனாவுக்கு ஆயுதங்கள் மூலம் பதிலடி தருவதற்கு இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

1996 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி இரு நாட்டு வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை.

 

சீன தாக்குதலில் தற்போது இருவர் இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில் சீனாவுக்கு பதிலடி தரும் வகையில் தமது யுக்தியை இந்தியா மாற்றியுள்ளது. இதனிடையே அவசர கால நிதியாக 500 கோடி ரூபாய்க்கு ஆயுதங்களை வாங்குவதற்கு முப்படைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon