--- --:--:-- --

11ஆம் வகுப்புக்கான புதிய பாட திட்டம் சிக்கலை ஏற்படுத்துகிறதா?

7

பதினோராம் வகுப்புக்காக தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய பாடப்பிரிவுகள் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புக்களை தடுப்பதாக முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.

 

தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் ஆறிலிருந்து ஐந்தாக குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். புதிய பாடத்திட்டம், கூடுதல் பாடங்களைப் படிப்பதை தவிர்க்கும் வகையில் இருக்கும் என்று கூறினாலும் மாணவர்களின் மேல் படிப்பு வாய்ப்புகள் குறைப்பதாக தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.

 

அதாவது கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவை தேர்வு செய்யும் மாணவர்கள் மருத்துவம் சேர முடியாத நிலை இருப்பதாகவும் இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவை தேர்வு செய்யும் மாணவர்கள் பொறியியலில் சேர முடியாத நிலை இருப்பதாகவும் தங்கம் தென்னரசு கூறுகிறார்.

 

இதற்கு முன்னதாக கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய நான்கு படங்கள் இருந்த நிலையில் மருத்துவம் அல்லது பொறியியல் படிப்புகளில் சேரும் வசதி மாணவர்களுக்கு இருப்பதாகவும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தமிழக மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகளை அளிக்கும் முடிவுகளை திரும்ப பெற்று பழைய நடைமுறையை தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon