--- --:--:-- --

” இதுக்கும்மேல எல்லாத்தையும் கடவுள் பார்த்துப்பான் ” – ஆனால் இதைச்சொல்ல ஒரு முதல்வர் எதற்கு ? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி !!!

0.3

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் யாரையும் கட்டாயப்படுத்துவதற்கு அல்ல, கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தவே ஊரடங்கு எனவும்,கொரோனா புதிய நோயாக இருப்பதால் உலகளவில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

 

மேலும்,கொரோனா நோய் எப்போது குறையும் என்பது கடவுளுக்குதான் தெரியும் எனவும்,வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் மூலமே கொரோனா தொற்று பரவியது; தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு தீவிர முயற்சி எடுத்துவருகிறது எனவும் தெரிவித்தார்.

இதற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ” இதுக்கும்மேல எல்லாத்தையும் கடவுள் பார்த்துப்பான் ” – பக்தர்கள் சொல்லும் கடைசி வார்த்தை இவை.ஆனால் இதைச்சொல்ல ஒரு முதல்வர் எதற்கு ? – என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பி உள்ளார்.

 

மேலும்,உங்களின் இயலாமையால் எத்தனையெத்தனை மரணங்கள்.கடவுள் உங்களை பார்த்துக்கொள்ளமாட்டான் முதல்வர் அவர்களே.இருந்தால் உங்களை தண்டிப்பான் #SaveChennai என காட்டமாக தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon