--- --:--:-- --

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!

0.1

கோவையில் நேற்று முன்தினம் 31,நேற்று 29 , இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று என நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் கோவை மாவட்ட காவல் துறை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ” கொரோனா பரவுவதை தடுக்க சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா,கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கோவை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முக்கியமாக கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து மாநில மற்றும் மாவட்ட
எல்லைகளில் சோதனைச்சாவடிகளில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாத யாரும் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும்,இ-பாஸ் பெற்று வருபவர்களையும் சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை அலுவலர்களை கொண்டு பரிசோதித்து 14 நாட்கள் அவரவர் வீடுகளில் தனிமைப் படுத்தப்படுவார்கள். இப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிகளை மீறி தன்னிச்சையாக வீடுகளை விட்டு வெளியேறுவது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட சுகாதார துறை அலுவலரிடம் புகார் பெற்று அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடை உரிமையாளர்கள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும்,பொதுமக்கள் பொது இடங்களுக்கு வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்தும்,சமூக இடைவெளியை கடைபிடித்தும் கொரோனா பரவலை தடுப்பதற்காக கோவை மாவட்ட காவல் துறையினர் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு நல்கி பொறுப்புணர்வோடு நடந்துகொள்ளுமாறு அந்தசெய்திக்குறிப்பில் கோவை மாவட்ட காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

இந்த எச்சரிக்கையை ஒட்டி மாவட்ட மற்றும் மாநகர காவல் துறையினர் சோதனைச்சாவடிகளின் வழியாக வரும் வெளிமாநில,வெளி மாவட்ட வாகனங்களை தடுத்தி நிறுத்து தீவிர சோதனைக்கு பின்னரே கோவை மாவட்டத்தினுள் அனுமதிக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon