கொரோனா சோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும்!
நாடெங்கும் கொரொனா பரிசோதனைக்கு ஒரே சீரான கட்டணம் நிர்ணயிக்குமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு கொரொனாபரிசோதனைக்கு நாடெங்கும் ஒரே மாதிரியான கட்டடம் இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளது.
கொரொனா பரிசோதனைக்கு 4,500 ரூபாய் கட்டணம் என்ற வரம்பை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கடந்த மே மாத இறுதியில் விலகிக்கொண்டது. இதையடுத்து மாநிலங்கள் வெவ்வேறு கட்டணங்களை நிர்ணயித்து வருகின்றன.
தமிழகத்தில் 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் உள்ள நிலையில் டெல்லி, தெலுங்கானா மாநிலங்களில் 2,200 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கருத்து வெளியாகியுள்ளது.






