வேலூர் மாவட்ட ஆட்சியர் எடுத்துள்ள புதிய நடவடிக்கை என்னென்ன?
வேலூர் மாவட்டத்தில் கடைகள், சந்தைகள் உள்ளிட்டவை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் காய்கறி, மளிகை கடைகள், துணிக்கடைகள், நகைக்கடைகள், வாரச் சந்தைகள் உள்ளிட்டவை திங்கள் , புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே செயல்படும். இறைச்சி கடைகள் ஞாயிறு, புதன் ஆகிய இரண்டு நாட்களில் மட்டுமே செயல்படும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த கடைகள் இயங்கும். உணவகங்கள், பேக்கரி போன்றவற்றிலும் ஞாயிறு தவிர பிற நாட்களில் இயங்கும்.
பார்சல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள், உழவர் சந்தைகள் ஆகியவை வழக்கம் போல அனைத்து நாட்களிலும் இயங்கும். மாவட்டம் முழுவதும் முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள், டீ கடைகளை திறக்க 30 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் சிறு, குறு , பெரு தொழில் நிறுவனங்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






