--- --:--:-- --

எல்லையில் பதற்றம் நிலவுவதால் 2 நாட்கள் லடாக்கில் ஆய்வு செய்த விமானப் படை தளபதி!

5

எல்லையில் பதற்றம் நிலவும் சூழலில் விமானப்படைத் தளபதி ஆர்‌கே‌எஸ் பதாரியா லடாக்கில் 2 நாட்கள் ஆய்வு செய்துள்ளார். புதன்கிழமை பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் வியாழக்கிழமை ஸ்ரீநகரில் உள்ள தளத்திற்கும் சென்று அவர் பார்வையிட்டுள்ளார்.

 

கிழக்கு லடாக் பகுதியில் சீனாவின் அத்துமீறலால் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் விமானப்படை தளபதி அங்கு சென்று படைகள் எந்த அளவு தயாராக உள்ளன என்பது குறித்து இரண்டு நாட்கள் ஆய்வு செய்தார் என அரசு தரப்பில் தெரிவித்ததாக ஏ‌என்‌ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இதனிடையே லே பகுதியில் போர் விமானங்கள் தாக்குதல் ஹெலிகாப்டர்களை பறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்த ஏதுவாக போர் விமானங்கள் முக்கியமான பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon