--- --:--:-- --

கல்வான் என்ற பெயருக்கு சொந்தக்காரர் இவர் தான்! பள்ளத்தாக்குக்கு இவர் பெயர் வர காரணம் என்ன?

5.2

இந்தியா மற்றும் சீன படை வீரர்கள் சண்டையிட்டுக் கொண்ட பள்ளத்தாக்கு கல்வான் என்று அழைக்கப்பட என்ன காரணம்? ரகுரம் எனும் பகுதியில் உற்பத்தியாகி அக்ஷய் சிங் வழியாக சுமார் 80 கிலோமீட்டர் பயணித்து பிறகு புகழ்பெற்ற இண்டஸ் நதியின் கிளையோடு இணையும் ஆறு தான் கல்வான். இந்த நதியின் பள்ளத்தாக்கு பகுதி கல்வான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.

 

லடாக்கில் வாழ்ந்த கல்வான் என்ற சாகசக்காரர் ஒருவரின் பெயரே அந்த நதிக்கு சூட்டப்பட்டுள்ளது. லடாக்கில் 1878 ஆம் ஆண்டு பிறந்த குலாம் அரசர் கல்வான் சாகசக்காரர் மற்றும் போர் படைகளுக்கு வழிகாட்டியாக 12 வயதில் ஏழ்மை காரணமாக கடுமையான சாகச பணியை ஏற்றுக் கொண்ட இவருக்கு பின் நாள்களில் அதுவே பிடித்தமானதாக மாறியது.

 

கடும் பனிப்பொழியும் பிரதேசங்களில் சற்றும் அசராமல் பயணம் செய்த இவர் பல்வேறு ஐரோப்பிய சாகசக்காரர் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து உள்ளார். உருது, லடாக்கி ஆகிய மொழிகளை பேசும் திறன் கொண்டவராக இவர் ஆங்கிலத்தையும் படிப்படியே கற்றுக்கொண்டார்.

 

தனது வாழ்க்கைப் பயணம் குறித்த சேர்வண்ட் ஆப் சாகிப் என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதி ஜம்மு-காஷ்மீர் மாகாணமாக இருந்தபோது சுயசரிதையை ஆங்கிலத்தில் எழுதிய முதல் நபர் கல்வான் என்று கூறப்படுகிறது. இந்த புத்தகத்தில் கல்வானின் பல பயணங்கள் சுவைபட எழுதப்பட்டுள்ளன.

 

பிரிட்டிஷ் ராணுவத்தில் சாதாரண பதவியிலிருந்து அக்ஷகா எனும் அதாவது லே மாகாணத்தின் முக்கிய பொறுப்பாளராக உயர்ந்தவர் கல்வான். அவ்வாறு பெருமைக்குரிய கால் வானின் பெயர் இன்றும் பள்ளத்தாக்கின் அடையாளமாக விளங்குகிறது. ஒரு புதிய பகுதிக்கு உள்ளூர் சாகசக்காரர் பெயர் சூட்டப்பட்டது அதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon