முதலமைச்சர் காரை நிறுத்தி உதவி கோரிய பெண்கள்..!
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனது காரை நிறுத்தி உதவித் தொகை கேட்ட ஏழை பெண்களிடம் பொறுமையாக விசாரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார். முதலமைச்சர் நேற்று மாலை தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்ததை கண்ட ஏழைப்பெண்கள் கையை தூக்கி நிறுத்தும் படி கூறினார்.
இதை கண்டதும் முதலமைச்சரின் கார் நிறுத்தப்பட்டது. உடனே முதலமைச்சரின் கார் அருகே சென்று ஏழை பெண்கள் தங்களுக்கு உதவி தொகை ஏதும் வரவில்லை எனக் கூறி அதை வழங்க கோரிக்கை விடுத்தனர். இதை பொறுமையோடு கேட்டு அறிந்த முதலமைச்சர் நலவாரியத்தில் பெயர்களை பதிவு செய்திருந்தால் உதவி தொகை அளிக்கப்படும் எனவும் ஆதலால் அதன் பெயர்களை பதிவு செய்யுங்கள் எனக் கூறினார்.
சிலர் முகக்கவசம் அணியாததை கண்டு அதை அணிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து புறப்பட்டு சென்றார்.






