தமிழகம் உள்ளிட்ட 15 முதல்வர்களுடன் பிரதமர் மோடி 17ம் தேதி ஆலோசனை!
கொரொனா பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அப்போது ஊரடங்கு குறித்தும், கொரொனா பரவல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த அபிப்ராயம் குறித்தும் அவர் கேட்டறிந்து வருகிறார். அதன்படி வரும் 16ஆம் தேதி கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் உடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதையடுத்து 17ம் தேதி அன்று மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், ஆந்திரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், தெலுங்கானா, ஒடிசா ஆகிய 15 முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.






