--- --:--:-- --

புதுக்கோட்டையில் நிகழ்ந்ததே விமான விபத்து..! நடந்தது என்ன? அச்சத்தில் நடுங்கும் மக்கள்!

5

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே விமானம் ஒன்று நொறுங்கி விபத்துக்குள்ளானதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி ஒரு செய்தி. இது உண்மைக்கு புறம்பானது எனதகவல் வெளியாகியுள்ளது. எனினும் அந்த பயங்கர சத்தம் எங்கிருந்து வந்தது என்று சந்தேகம் எழுந்துள்ளது.

 

வீடுகளை அதிரவைத்த சப்தம் துப்பாக்கி வெடித்த ஓசை அல்லது வெடி குண்டாக இருக்கவேண்டும் என்கிற அளவிற்கு எழுத பயங்கர ஓசை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து சென்ற விமானம் இவை அனைத்தையும் உணர்ந்த மக்களுக்கு சிறிது நேரத்தில் கிடைத்த தகவல் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது என்பதே.

 

இது உண்மை இல்லை என பிறகு தெரிய வந்த போதிலும் வானிலிருந்து வெடிகுண்டு வெடித்தது போல பயங்கர சத்தம் எங்கிருந்து வந்தது என்பது இவர்களது கேள்வியாக உள்ளது. சந்தேகப்படும் வகையில் அந்த கண்மாயில் சில சம்பவங்களும் நிகழ்ந்திருப்பது தான் பல்வேறு வினாக்களை எழுப்பியுள்ளது.

 

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் வெடிச் சத்தத்தை தெளிவாக கேட்டிருக்கிறார்கள் கிராம மக்கள். அதே நேரத்தில் விமானம் ஒன்று பறந்து செல்வதையும் அவர்கள் பார்த்துள்ளனர். அச்சமயம் 200 மீட்டர் தொலைவில் காட்டு தீ பற்றி எரிந்தது. வெடிச்சத்தம் கண்மாயில் உள்ள கருவேல மரங்கள் எரிந்தது விமானம் பறந்தது.

 

இவை மூன்றையும் ஒருசேரப் பார்க்கும் போது ஏதோ ஒன்றை மறைக்க திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட செய்யலாம் என அச்சம் கொள்கின்றனர் மக்கள். இல்லை என்றால் விமானத்திலிருந்து வீசப்பட்ட பொருளால் தீப்பிடித்ததா என்கிற ஐயமும் எழுந்துள்ளது. குழம்பிப் போயிருக்கிறார்கள் மக்கள்.

 

இந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மாநில அரசு அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்து மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon