தமிழ் சினிமாவில் கதாபாத்திரங்கள் அதிருப்தி அளித்தது..!அதனால் மலையாளத்திற்கு சென்றேன் என கூறிய கமல்!
தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் அதிருப்தி அளித்ததால் மலையாளத்திற்கு சென்றதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் சினிமா குறித்த நினைவலைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டார்கள்.
அப்போது பேசிய நடிகர் கமலஹாசன் தொடக்க காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்கள் அதிருப்தியை அளித்ததால் மலையாளத்திற்கு சென்றதாக கூறினார். அங்கு தன்னால் சினிமாவை கற்றுக் கொள்ள முடிந்ததாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
புதிய தொழில்நுட்பம், புதிய கலைஞர்களை கண்டறியும் தனக்கு ஏ ஆர் ரகுமானை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இளையராஜாவுடன் பணியாற்றி வந்ததால் வேறொரு இசையமைப்பாளரை தேடும் எண்ணம் வரவில்லை என்றும் கமல் பேசினார்.






