--- --:--:-- --

சென்னையில் மருத்துவர்களை குறிவைக்கும் கொரோனா வைரஸ்!

7

சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் 30 மருத்துவர்களுக்கு தொற்று உறுதியாக இருப்பதாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி கூறியிருக்கிறார். கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை முதல்நிலை களப்பணியாளர்களான மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் 3,000 பேருக்கு பரிசோதனை செய்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

 

முன் களப் பணியாளர்களின் நலன் கருதி தொடர்ச்சியாக தினசரி 150 பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டு வருவதாக கூறிய அவர் கடந்த இரண்டு நாட்களில் 30 மருத்துவர்களுக்கு தொற்று உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். அவர்கள் அறிகுறி இல்லாதவர்களாக இருப்பதாகவும், உடல் நலத்துடன் இருப்பதாகவும் மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி குறிப்பிட்டார்.

 

தொற்று ஏற்பட்டிருக்கும் நபர்கள் உடனே இருந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு தொற்று ஏற்படுவதை பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது பெருமளவில் குறைந்திருப்பதாகவும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்தி விளக்கம் அளித்துள்ளார்.

 

சென்னை மருத்துவக் கல்லூரி ஆடவர் விடுதியில் முதுகலை மாணவர்கள் 42 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. 58 மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 42 பேருக்கு கொரொனா இருப்பது உறுதியாகி இருப்பது தெரியவந்துள்ளது.

 

தொற்று உறுதியான மாணவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon