கொரொனா அச்சத்தால் 2 ஆம் மாடியில் இருந்து குதித்து வியாபாரி தற்கொலை!
சென்னையில் கொரோனா நோய்த்தொற்று அச்சம் மற்றும் தொழில் பாதிக்கப்பட்ட மன உளைச்சலில் இருந்த நபர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வசித்து வந்த பர்வேஸ் அஜ்மீரா என்ற இந்த நபர் சவுகார்பேட்டை பெருமாள் முதலி தெருவில் கடந்த 5 ஆண்டுகளாக கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வந்தார்.
இன்று திடீரென்று பர்வேஸ் அஜ்மீரா கடையின் மேல் உள்ள இரண்டாவது தளத்திற்கு சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார். கொரொனா காலகட்டத்தில் அச்சம், குழப்பம் இருந்தால் தகுந்த ஆலோசனை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.






