தன்னை கடித்த பாம்பையும் எடுத்துக்கொண்டு மருத்துவமனை சென்ற நபர்!
கோவையில் போதையில் தன்னை பிடிக்க வந்தவரை கடித்த பாம்பை பிடித்து பையில் போட்டு கடித்த பாம்பையும் நண்பர்கள் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிங்காநல்லூரை சேர்ந்த பெயிண்டர் ஆன சௌந்தர்ராஜன் கோரிப்பாளையத்தில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு போதையில் சென்றுள்ளார்.
அப்போது வீட்டிற்குள் புகுந்த நாகபாம்பு ஒன்று அவர் அடிக்க முற்பட்டபோது அவரது கையை கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக சவுந்தரராஜனை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புறப்பட்ட நண்பர்கள் உடன் அந்தப் பாம்பை பிடித்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு எடுத்துச் சென்றுள்ளனர்.
கடித்த பாம்பு எந்த வகையானது என்பதை காண்பிக்க எடுத்து வந்ததாக கூறிய அவர்கள் பின்னர் அதை மருத்துவமனை நிர்வாகத்தின் மூலம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.






