சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
சென்னை மருத்துவ கல்லூரி ஆடவர் விடுதியில் முதுகலைமாணவர்கள் 42 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. 58 மாணவர்களுக்கு பரிசோதிக்கப்பட்டது. இதில் 42 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
தொற்று உறுதியான மாணவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ மாணவர்களுக்கும் கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






