மீனவர்களுக்கு முககவசம் வழங்கிய எம் எல் ஏ மணிகண்டன் !
இராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினரும் மருத்துவருமான எம்.மணிகண்டன் இராமேஸ்வரத்தில் மீனவர்களை சந்தித்து பேசினார்.மேலும் மீன்பிடி தடைக்காலம் முடிந்து, நாளை கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கும் மீன்பிடி தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து முககவசங்கள் வழங்கி, சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார் .
உடன் இராமேஸ்வரம் நகர் கழக செயலாளர் KK அர்ச்சுனன்,நகர் கழக அவைத் தலைவர் R குணசேகரன் மற்றும் நகர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






