--- --:--:-- --

கொரோனா தொற்று அதிகரிப்பால் கூடுதலாக 112 ஆம்புலன்ஸ்கள் வருகை!

5

சென்னையில் கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கூடுதலாக 112 ஆம்புலன்ஸ்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் ஒட்டுமொத்தமாக 947 ஆம்புலன்ஸ்கள் செயல்பாட்டில் உள்ளன.

 

இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து என்பது ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆம்புலன்ஸ்களின் தேவையை கருத்தில் கொண்டு வெளி மாவட்டங்களிலிருந்து 112 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

 

இதன் மூலம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சேர்த்து 192 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு உள்ளன. ஆம்புலன்சில் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியாளர்களும் சென்னை வர உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon