ஆளில்லா விண்கலம் செலுத்தும் ககன்யான் திட்டம் ஒத்திவைப்பு!
விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதன் முன்னோட்டமாக இந்த ஆண்டு இறுதியில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட விருந்த ஆளில்லா விண்கலம் திட்டம் ரத்து செய்யப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் 2022ஆம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டது.
இதற்கு முன்னோட்டமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்ய திட்டமிட்டது. அதில் ஒரு ரோபோ அனுப்பபட இருந்தது. இந்நிலையில் கொரொனா மற்றும் நிதிப் பிரச்சினை காரணமாக இந்த திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை இஸ்ரோ தலைவர் கூறியது, ககன்யான் திட்டத்தை போன்று இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்படுத்த இருந்த சந்திரயான் 3 திட்டமும் ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.






