தூய்மைப் பணியாளர்களுக்கு நடிகர் லாரன்ஸ் நிதியுதவி!
தமிழகத்தில் கொரொனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
கொரொனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தியது முதலே பெப்சி தொழிலாளர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு லாரன்ஸ் நிதி உதவி வழங்கி வருகிறார். தற்போது தனது அடுத்த படத்தில் ஊதியத்திலிருந்து 25 லட்சம் ரூபாயை குறித்து தமிழகம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்து 385 விற்பனையாளர்களுக்கு நிதி உதவி வழங்கி உள்ளார்.
இதனைப் பாராட்டி உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அமைச்சருக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள லாரன்ஸ் உங்களுடைய பாராட்டு மேலும் சமூகத் தொண்டாற்ற ஊக்குவிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.






