ராஜஸ்தான் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்ற நகரில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்ததால் நகர மக்களும் விவசாயிகளும் அச்சமடைந்தனர். கொரொனா பீதிக்கு மத்தியில் ஏற்படுத்திய வெட்டுக்கிளி படையெடுப்பால் கோட்டா நகரத்தில் அதிர்வளை உருவானது.
வானத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வெட்டுக் கிளிகள் பறந்து வந்ததை அந்நகர மக்கள் தங்கள் வீடுகளுக்கு மேலே ஏறி பார்த்தனர். ரயில் நிலையம் பகுதியில் வெட்டிகிளி ஊடுருவியதை அதிகாரிகள் அவசர எச்சரிக்கை ஒலி எழுப்பி நகர மக்களை உஷார்படுத்தினார். விளைநிலங்களில் வெட்டுக்கிளிகள் முகாமிட்டு உள்ளதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.






