--- --:--:-- --

இந்தியாவும் சீனாவும் மீண்டும் நடத்தும் பேச்சுவார்த்தை ?

9

எல்லையில் பதற்றத்தை தடுப்பது தொடர்பாக இந்தியா – சீனா இடையே முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கரை மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எல்லையில் இருக்கும் படைகளை சீனா வாபஸ் பெற வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

 

இரு தரப்பினரும் நேர்மறையான மனநிலையில் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் கிழக்கு லடாக் பகுதியில் சீன படைகள் அத்துமீறியதனால் இரு தரப்பு ராணுவ வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்தது பதற்றம் அதிகரித்தது.

 

இதற்காக கடந்த 6ஆம் தேதி இராணுவ அதிகாரிகள் வட்டாரத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சீனாவும் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெற்றது. மேலும் பதற்றத்தை தடுப்பது குறித்து இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon