திண்பண்டம் என நினைத்து ஜெலட் குச்சியை கடித்த சிறுவன் உயிரிழப்பு!
தின்பண்டம் என்று நினைத்து ஜெலட்டின் குச்சியை கடித்த 9 வயது சிறுவன் உயிரிழந்த துயர சம்பவம் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே நிகழ்ந்துள்ளது.
மேற்கூரை கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன் என்பவர் தனது சகோதரர் பூபதி உறவினர்கள் மோகன்ராஜ், செல்வராஜ் ஆகியோர் உடன் பாப்பாபட்டியில் இயங்கும் கல்குவாரியில் 4 ஜெலட்டின் குச்சிகளை சட்டவிரோதமாக வாங்கியுள்ளார்.
அவற்றைக் கொண்டு அவர்கள் திங்களன்று மணமெடு காவிரி ஆற்றில் வெடிக்க வைத்து மீன் பிடித் துள்ளனர். மீதமுள்ள ஒரு ஜெலட்டின் குச்சியை கங்காதரன் தனது வீட்டின் கட்டிலில் வைத்துள்ளார். அங்கு சென்ற பூபதியின் ஒன்பது வயது மகன் விஷ்ணு குச்சியை தின்பண்டம் என நினைத்துக் கடித்துள்ளான்.
அப்போது ஜெலட்டின் குச்சி வெடித்து சிறுவனின் முகம் படுகாயமடைந்து உடனடியாக முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே சிறுவன் விஷ்ணு உயிரிழந்தான்.
இதனை அறிந்து உடலை வீட்டிற்கு எடுத்து வந்து அவர்கள் சடலத்தை எரித்துள்ளனர். தகவலறிந்த விஏஓ ரெஜினா மேரி அளித்த புகாரின் பேரில் கங்காதரன், மோகன்ராஜ் ,செல்வராஜ் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.






