--- --:--:-- --

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை! மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி!

5.1

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது முதல் கூடலூர் வட்டாரத்திலும் மழை பெய்து வருகிறது. பிற்பகல் சுமார் அரை மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது.

 

இதேபோல ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தமிழகம் – கர்நாடகா இடையே பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மதுரையில் பல இடங்களில் மிதமான மழை பெய்தது.

 

கோரிப்பாளையம், காளவாசல், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் திடீரென மழை பெய்ததுது.

 

கீழையூர், தும்பைபட்டி, அட்டபட்டி, கோட்டநத்தம்பட்டி, வண்ணாம்பாறை, சூரகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களில் பரவலாக மழை பெய்தது.

 

முனீஸ்வரம் சலுகை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திருப்பூர் மாவட்டம் அவினாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon