--- --:--:-- --

இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது!

5

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50 % இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழக அரசு மற்றும் அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போன்ற காட்சிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் புதிதாக இட ஒதுக்கீடு கேட்கவில்லை என்றும் ஏற்கனவே உள்ளதை அமல்படுத்த கோருவதாகவும் வாதிட்டனர். மேலும் இட ஒதுக்கீடு அமல் படுத்தாமல் இருப்பது அடிப்படை உரிமை மீறல் எனவும் வாதங்களை முன்வைத்தனர்.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையின் கீழ் வராது என தெரிவித்தனர். இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையாக கருதப்படாத போது எவ்வாறு இந்த வழக்குகளை பதிவு செய்தீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பாதிக்கப்பட்ட அனைவரும் நீதிமன்றம் வர இயலாது. எனவே அரசியல் கட்சிகள் முன்னெடுப்பதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

ஒரு பொது விஷயத்திற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிய நீதிபதிகள் இந்த கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி மனுவை திரும்பப் பெறுமாறு தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon