--- --:--:-- --

திருப்பதியில் 83 நாட்களுக்கு பிறகு பொது தரிசனம்!

4.1

பிரசித்தி பெற்ற திருமலை, திருப்பதி, ஏழுமலையான் கோவிலில் 83 நாட்களுக்குப் பின் பக்தர்கள் இன்று அனுமதிக்கப்பட்டு தரிசனம் தொடங்கப்பட்டுள்ளது. பொது முடக்கத்தால் திருமலை, திருப்பதி, ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் முதற்கட்டமாக கடந்த 8ஆம் தேதி கோவில் ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

 

அதைத் தொடர்ந்து உள்ளூர் பக்தர்கள் நேற்று அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வெளிமாநில பக்தர்களுக்கான பொது தரிசனம் 83 நாட்களுக்குப் பின் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஆறாயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon