கீர்த்தி சுரேஷின் பென்குயின் பட டிரைலர் காட்சிகள் வெளியீடு!
கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள பென்குயின் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் வேகத்தில் உருவாகியுள்ள படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
பெரும் சர்ச்சைக்கு மத்தியில் அமேசான் ஓடிடி தளத்தில் வரும் 19ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் டிரைலர் காட்சிகளை நடிகர் தனுஷ், நாணி, மோகன்லால் ஆகியோர் தங்களது சமூக இணைய தளங்களில் வெளியிட்டுள்ளனர்.






