புதுச்சேரி பல்கலைகழகத்தில் 1,2 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து!
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இறுதியாண்டு தவிர்த்து இதர செமஸ்டர் தேர்வு இல்லை என்று இன்டர்நல் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டு முறை அந்தந்த செமஸ்டர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறியர்களுக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.






