--- --:--:-- --

கொரொனாவால் உயிரிழந்த கணவன் ! அதை அறியாமல் கொரொனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் மனைவி! மகளின் கண்ணீர்!

5.1

மருத்துவர்களின் அலட்சியத்தால் தனது தந்தை இறந்து விட்டதாகவும் அவர் இறந்தது கூட தெரியாமல் குழந்தைகள், தாய் சிகிச்சை பெற்று வருவதாகவும் கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறார் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர். எண்ணூர் அருகே அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் 71 வயதான விஜயன் 30 ஆண்டுகளாக சென்னை மருத்துவக் கல்லூரியில் நூலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

 

கடந்த 20ஆம் தேதி சளி மற்றும் காய்ச்சல் காரணமாக மணலி புதுநகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்கு சென்றார். சாதாரண காய்ச்சல் என்று கூறி மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கூடுதல் கவனத்துடன் செயல் படாமல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலட்சியம் காட்டுவதாக கூறப்படுகிறது.

 

கடந்த 26ஆம் தேதி தனியார் மருத்துவமனையை நாடினார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 30 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

 

ஆனால் முழுவதுமாக உடல் மூடப்படாமல் கால்கள் தெரிந்த நிலையில் மருத்துவமனை அனுப்பியதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கூட இறக்குவதற்கு முன் வரவில்லை. இதனால் நொந்து போன அவரது உறவினர்கள் முன்வந்து விஜயனின் உடலை இறக்கி மேலும் அலட்சியப் போக்குடன் 4 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர் அவரது உறவினர்கள்.

 

இது ஒருபுறமிருக்க விஜயனின் இறப்பு குறித்து சிகிச்சை பெற்று வரும் அவரது மனைவி மற்றும் இரண்டு பேரன்களுக்கும் இதுவரை தெரியாது என்பது வேதனையின் உச்சம். முறையான சிகிச்சை அளிக்காததால் மருத்துவ ஊழியர்களின் அலட்சியப் போக்கே தனது தந்தை இறப்புக்கு காரணம் என விஜயனின் இளைய மகள் கீதா கண்ணீருடன் தெரிவித்தார்.

 

தனது தந்தைக்கு நேர்ந்தது போல இனி யாருக்கும் நிகழக் கூடாது என வேதனையுடன் தெரிவித்தார் கீதா. கொரொனாவுக்கு எதிராக கடுமையாக போராடும் மருத்துவர்கள், பணியாளர்கள் மத்தியில் இது போன்ற ஓரிரு சம்பவங்களும் நிகழத்தான் செய்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon