ஜூலையில் தமிழகத்தை நடுங்க வைக்கப்போகும் கொரொனா!
சென்னையில் ஜூலை மாத தொடக்கத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணிப்பார்கள் என ஆய்வு தகவல் வெளியாகியுள்ள நிலையில் கொரொனா பரவல் சங்கிலியை உடைக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை தலைநகர் சென்னை கொரோனாவின் ஹாட்ஸ்பாட் ஆக மாறி வருகிறது.
நாள் தோறும் வெளியாகும் புதிய பாதிப்பு எண்ணிக்கையில் சென்னையில் மட்டும் சராசரியாக 70 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மரணத்தை கணக்கிடுகையில் இதுவரை உயிரிழந்தவர்களில் 78% பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
இப்படி கொரொனாவுடன் சென்னை வாழப்பழகி கொண்டிருக்கும் வேளையில் ஜூலை 15-ஆம் தேதிக்குள் சென்னையில் மட்டுமே ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என்றும் 1600 பேர் வரை மரணிப்பார்கள் என்றும் அதிர வைத்துள்ளது எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முடிவு.
ஜூன் மூன்றாம் தேதி வரை சென்னையில் மட்டும் 17 ஆயிரத்து 738 பேர் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்றும் 156 பேர் வரை மரணிப்பார்கள் எனவும் எம்ஜிஆர் பல்கலைக்கழக ஆய்வில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த ஆய்வு முடிவு கிட்டத்தட்ட ஒத்துப்போனது. ஆம். ஜூலை 3ஆம் தேதி வரை சென்னையில் மட்டும் 17 ஆயிரத்து 598 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 153 பேர் உயிரிழந்தனர்.
அதே ஆய்வில்தான் இந்த மாத இறுதிக்குள் தமிழகத்தின் பாதிப்பு ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை எட்டும் எனவும் உயிரிழப்பு எண்ணிக்கை 750 தாண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அக்டோபரில் பாதிப்பு மேலும் உச்சத்தை அடையும் என ஆய்வு தகவல் எச்சரிக்கிறது. உலகளவில் கொரொனா பரவலை குறைக்கும் ர் வால்யூ படி இந்தியாவில் பரவல் விகிதம் 2.3 முதல் 2.8 வரை உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதாவது இந்தியாவில் தொற்றுள்ள ஒரு நபர் 2 முதல் 3 பேருக்கு வரை கொரொனா தொற்றை பரப்புவதாகவும் இந்த 6 வால்யூ எண்ணிக்கையை ஒன்றுக்குள் வைத்தால் மட்டுமே கொரொனா பரவலை கட்டுபடுத்த முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.






